வெயில் காலம் இல்லை..! மழைக்காலம் தான் கொரோனாவை விரட்டி அடிக்கும்..! எப்படி தெரியுமா? வெளியானது ஆய்வு அறிக்கை!

காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் பொழுது கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என கூறப்படும் கருத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் இருவர் ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலவரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.


உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய ஒன்றாக கொரோனா வைரஸ் இருந்து வருகிறது. சீனா , ஸ்பெயின், அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பரவி வந்த இந்த வைரஸ் ஆனது தற்போது இந்தியாவிலும் தன்னுடைய கோர தாண்டவத்தை காட்டத் துவங்கியுள்ளது. 

பொதுவாகவே காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் பொழுது கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவிட வாய்ப்புகள் உள்ளது என பலரும் கூறி வரும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த இருவர் இது குறித்து ஆய்வு ஒன்றை செய்துள்ளனர். அந்த ஆய்வில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி வரையிலான புள்ளி விவரங்களை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுச்சூழலில் இருக்கும் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை கொரோனா அவருடன் தொடர்புபடுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் கொரோனா வைரஸ் மற்றும் வெப்பநிலைக்கு இடையேயான தொடர்பு பலவீனமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது சீரான வெப்ப நிலையை கொண்டிருக்கும் அமெரிக்கா மாநிலங்களான புளோரிடா, லூசியானா மற்றும் வெப்பம் அதிகம் கொண்ட நாடுகளான இந்தியா, பிரேசில், மலேசியா ஆகிய இடங்களிலும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

இந்தக் கருத்துக்களின் மூலம் வெப்பநிலை சாராத காற்றின் ஈரப்பதம் அளவை வைத்துதான் வைரஸ் பரவுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான யூஸஃப் ஜமால் என்பவர் கூறியிருக்கிறார். அதாவது கடந்த 2003 ஆம் ஆண்டு பரவிய சார்ஸ் வைரஸ் வெப்பநிலை அதிகரித்த போது தன்னுடைய வீரியத்தை இழந்ததாக ஆய்வு முடிவுகள் கூறியது.

ஆனால் கொரோனா வைரஸ் காற்றின் ஈரப்பதத்தின் மூலம் வேகமாக பரவுவதை குறைத்துக் கொள்கிறது. ஆகையால்தான் வெப்பநிலை மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக உள்ள நாடுகளில் இந்த வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதாக ஆராய்ச்சியாளர் யூஸஃப் ஜமால் கூறியிருக்கிறார்.

மேலும் நம்முடைய நாட்டை பொறுத்தவரை பருவமழை துவங்கினால் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் பருவ மழை துவங்கும் வரை நாம் காத்திருந்தோம் ஆனால் வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கருத்தில் கொண்டுதான் நம்முடைய அரசாங்கம் தேவையான தக்க நடவடிக்கைகளையும் ஊரடங்கு உத்தரவுகளையும் பிறப்பித்து வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.