40 நொடிகள் உள்ளே போனால் போதும்..! கொரோனாவை கொள்ளும் விசேஷ அறை கண்டுபிடிப்பு..! எங்கு தெரியுமா?

40 வினாடிகளிலேயே கொரோனா வைரஸை அழிக்கும் அறை ஒன்று ஹாங்காங் நாட்டின் விமான நிலையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள செய்தியானது வைரலாகி வருகிறது.


ஹாங்காங் நாட்டில் இயங்கிவரும் ஒரு விமான நிலையத்தில் புதிதாக ஒரு அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் உள்பகுதியில் முழுவதுமாக கிருமிநாசினி பூசப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாகவே இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த அறையில் போட்டோ கேட்டலிஸ்ட் (photo catalyst) மற்றும் நானோ ஊசிகளை கொண்டு கிருமிநாசினி ஸ்பிரே தெளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த அறையில் மனிதர்கள் 40 வினாடிகள் இருக்கும் பட்சத்தில் கிருமிநாசினிகள் மனிதர்களுக்குள் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகள் அனைத்தையும் அழித்துவிடுவதாக கூறப்படுகிறது.

இந்த தனி அறையை "கிளீன்டெக் சானிடேஷன் பாட்ஸ்" என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. உலகத்திலேயே ஹாங்காங் நாட்டின் விமான நிலையத்தில் மட்டுமே இது போன்ற தனி அறை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியானது தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.