தமிழக கொரோனா பாதிப்பு 411 ஆக உயர்வு..! நாட்டிலேயே முதலிடம் பிடித்தது..! எப்படி தெரியுமா?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.


சீனாவின் வுகான் மாநிலத்தில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவத்தை ஆடி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தமாக 309 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பீலா ரஜேஷ் தகவல் அளித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 102 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 

அதன்படி தற்போது தமிழகத்தில் 411 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலானோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.