நம்ம தர்மாகோல் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா அறிகுறி! அச்சத்தில் அமைச்சர்!

அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனாவாம். என்ன காரணம் சொல்லப்போகிறார் என்ற நினைத்தாலே பகீரெடுக்கிறதே!


கொரோனாவுக்கு நாங்கள் அஞ்சும் ஆட்கள் அல்ல என்பதுதான் அ.தி.மு.க. அமைச்சர்களின் வீர வசனம். செல்லூர் ராஜூவும் அதற்கு சளைத்தவர் அல்ல. குறிப்பாக, தி.மு.க.வினரால்தான் கொரோனா நாடெங்கும் பரவுகிறது என்று தம்பட்டம் அடிப்பவர்கள். இந்த நிலையில்தான் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆம், செல்லூர் ராஜூவின் மனைவி ஜெயந்திக்கு கடந்த சில நாள்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் எடுத்துக்கொண்ட மருந்துகள் சரிவரவில்லை என்பதால், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.