முதலில் பாசிட்டிவ்..! பிறகு நெகட்டிவ்..! மீண்டும் பாசிட்டிவ்..! தற்போது மரணம்..! கொரோனா நோயாளிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

மேற்கு வங்கத்தில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு முதலில் பாசிட்டிவ் என்றும் பின்னர் நெகட்டிவ் என்றும் கடைசியில் பாசிட்டிவ் என்று கூறிய பட்சத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தாவை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ். இவருக்கு வயது 68. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவருக்கு சளி, இருமல் , காய்ச்சல் போன்றவை இருந்துள்ளது. இதனால் அவர் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பங்கூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்டதால் அவரை மருத்துவர்கள் சோதனைக்கு உட்படுத்தினர். அதன் முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து மருத்துவர்கள் நோய்த்தொற்று உறுதியான ஓம்பிரகாஷ் தன்னுடைய வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு அடுத்த நாளே ஓம் பிரகாஷ்க்கு கொரோனா வைரஸ் தொற்று நெகட்டிவ் என்று சோதனை முடிவில் தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று நெகட்டிவ் என்று எழுதி ரிப்போர்ட்டை அவர்களிடம் அளித்துள்ளனர். தனக்கு வைரஸ் தொற்று இல்லை என்ற நம்பிக்கையோடு வீடு திரும்பிய ஓம் பிரகாஷுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

ஓம் பிரகாஷின் மகன் பெயர் ராஜ் குப்தா. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி 24 மணி நேரம் கழித்து ராஜ் குப்தா விற்கு மருத்துவமனையிலிருந்து போன் செய்யப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் ஓம் பிரகாஷ் கொரோனா வைரஸ் டெஸ்ட் பாசிட்டிவ் என்று கூறியுள்ளனர். இதனைக்கேட்ட ராஜ் குப்தா மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மருத்துவமனை நிர்வாகிகள் உடனடியாக நாங்கள் ஆம்புலன்சை அனுப்பி வைக்கிறோம். மருத்துவமனைக்கு உங்களது தந்தையை அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

ஆனாலும் ஓம்பிரகாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சோதனையின் முடிவுகள் மாறி மாறி வெளிவந்து குழப்பத்தை ஏற்படுத்தியதால் பரிதாபமாக நோயாளி ஒருவர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.