கொரோனா சடலங்கள்! உறவினர்களே தொட தயக்கம்! ஆனால் நெகிழ வைத்த SDPI தொண்டர்கள்!

கொரோனா உயிரிழப்பும் SDPI தொண்டர்களின் மனிதநேயப் பணிகளும்!


கொரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்கள் கூட பெற்று நல்லடக்கம் செய்ய முன்வராத நிலையில், உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று, உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவர் மத நம்பிக்கை பிரகாரம் நல்லடக்கம் செய்தும், எரியூட்டியும் மனிதநேயப் பணிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தமிழகம் முழுவதும் சேவையாக செய்து வருகின்றனர்.

இறந்த உடல்களைப் பெற்று சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி, தேவையான பாதுகாப்பு உடைகள் அணிந்து, உரிய பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி இப்பணிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் மட்டும் இதற்காக 6 நபர்களைக் கொண்ட 18 குழுக்களை SDPI கட்சி தயார்படுத்தி இப்பணிகளை செயல்படுத்தி வருகின்றது. சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புதுவையிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் மூலம் இத்தகைய மனிதநேயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்று (ஜூன் 16) வரை சென்னையில் மட்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தன்னார்வலர்கள் குழு மூலம் கொரோனாவால் உயிரிழந்த 32 பேரின் உடல்கள் முறையாக நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏ.கே.கரீம்

ஒருங்கிணைப்பாளர்

ஊடகம்- மக்கள் தொடர்பு

SDPI கட்சி