இந்தியாவில் 2வது ஸ்டேஜில் இருந்து 3வது ஸ்டேஜூக்கு வந்துவிட்டதா கொரோனா? சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவல் !

கொரனா நோய் பரவலில் தற்போது இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார் கொரனாவுக்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்


முதலில் சீனாவின் வூகான் நகரில் பரவத் தொடங்கிய கொரனா எனும் கொடிய அரக்கன் உலகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட 35 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்துவிட்டது. நாளுக்கு நாள் கொரனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வர, தற்போதைய நிலவரப்படி, 7.43 லட்சம் பேர் சிகிச்சை பெறும் நிலையில் சுமார் 1.57 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கொரனா இந்தியாவை பொறுத்தவரை 2வது கட்டத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில், இல்லை இல்லை 3வது கட்டத்திற்கு வந்துவிட்டதா கொரனாவுக்கு எதிரான பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரனாவால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்து ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த டாக்டர் கிரிதர் இதை தெரிவித்து உள்ளார். மேலும் அடுத்து வரும் நாட்களில் நிறைய நோயாளிகளை எதிர்கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ள அவர், அதற்கான முன்னேற்பாடுகளுடன் நாம் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தற்போது நிறையே பேருக்கு கொரனா பாதிப்பு இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டாலும், தற்போதைய சூழலில் இருமல், காய்ச்சல், மூச்சடைப்பு உள்ளவர்கள்தான் பரிசோதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று கூறுகிறார் டாக்டர் கிரிதர்.

எனவே கொரனா அறிகுறி இல்லாதவர்களையும் பரிசோதிக்க வேண்டும் என தெரிவிக்கும் அவர் 3 கோடி பேர் வாழும் இடத்தில் குறைந்த பட்சம் 3 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் காலியாக உள்ள கல்லூரி மாணவர்கள் விடுதியை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கும் டாக்டர் கிரிதர், சிகிச்சை பெறுபவர்களை தனித்தனியாக பிரித்து அனுமதிக்கவேண்டும் என கூறியுள்ளார். ஸ்டேஜ் 3 என்பது வெளிநாட்டில் இருந்து கொரனா தொற்றோடு வந்த நபர் மூலம் அவர் பழகியவர், பழகியவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுதல் எனும் சமூகப் பரவல் ஆகும்.