மாலை ஸ்நாக்ஸ் எல்லோரும் விரும்பும் ஒன்று. மிக்ஸர், காராசேவ், போன்ற ஸ்நாக்ஸ் எல்லோராலும் விரும்பத்தக்கது. அதை சத்துள்ளதாக செய்தால் இன்னும் நல்லதல்லவா?.
சத்துள்ள காராசேவ் – எண்ணையில்லாமல் காராசேவ் எப்படி செய்யலாம்னு தெரியுமா?

இங்கு எண்ணெயில்லாமல் காராசேவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வறுத்த கோதுமை ரவை - ஒரு கப்
வேக வைத்து மசித்த பாசிப்பருப்பு - கால் கப்
தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன்
வேக வைத்து மசித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு - அரை கப்
பொடித்த வெல்லம் - 3 ஸ்பூன்
சுக்கு தூள் - 3 ஸ்பூன்
மிளகு - 5 எண்ணிக்கை
உப்பு - ஒரு சிட்டிகை
நெய் - ஒரு ஸ்பூன்
செய்முறை : வறுத்த கோதுமை ரவையுடன் சுக்கு, மிளகு, வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இந்த கலவையுடன் மசித்த பாசிப்பருப்பு, சர்க்கரை வள்ளி கிழங்கு, உப்பு சேர்த்து நன்றாக பிசையவும். வாணலியில் நெய் விட்டு இந்த மாவை சேர்த்து சுருள வதக்கவும். பின்னர் அந்த மாவை நீள நீளமாக காராசேவு போல் இட்லி தட்டில் இட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.