ஆரோக்கியத்தை விரும்புபவர்கள் இந்த தோசையை செய்து பார்க்கலாமே!!!

பிரண்டை அற்புதமான சுகாதார நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாகத் திகழ்கிறது.


அஜீரணம், எலும்பு முறிவுகள் மற்றும் சுளிக்கு பொன்ற பிரச்சனைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது. மேலும் மாதவிடாய் பிரச்சனை, காது வலி, மூல வியாதி போன்றவற்றுக்கு வீட்டிலேயே சிறந்த மருந்தாக பிரண்டை பயன்படுகிறது.

பிரண்டை தோசை எப்படி செய்வது என்று பார்கலாம்.

தேவையானவை: பச்சரிசி - 2 கப்,

புழுங்கலரிசி - 2 கப்,

உளுத்தம்பருப்பு - முக்கால் கப்,

பிரண்டை (பிஞ்சாக இருக்கவேண்டும்) - அரை கப்,

வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து, வெந்தயம் எல்லாவற்றையும் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அரிசி பாதி அரைபட்டதும், பிரண்டையை நறுக்கி அதில் போட்டு மீண்டும் அரைக்கவும். மாவு பொங்கப் பொங்க அரைபட்டதும் வழித்து, உப்புப் போட்டுக் கரைத்து, ஒரு இரவு முழுக்க புளிக்க வைக்கவும். பிரண்டைக்கு லேசான அரிக்கும் தன்மை இருப்பதால், மாவு புளித்தால்தான் தோசை நன்றாக இருக்கும். இந்த தோசை வாயுத்தொல்லைக்கு மிகவும் நல்லது.