காயம் ஏற்பட்ட மறுநாளே அணியில் இருந்து நீக்கம்! விஜய் சங்கருக்கு எதிராக கோலி - சாஸ்திரி சதி!

உலகக் கோப்பை இந்திய கிரிக்கெட் அணியில் விஜய் சங்கர் காயம் காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது.


ஆனால் விஜய் சங்கர் திடீரென்று உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு வேறு ஏதாவது காரணம் இருக்குமா என்று சந்தேகங்கள் வலுத்து வருகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விஜய்சங்கர் காயம் காரணமாக இடம்பெறவில்லை அவருக்கு பதிலாக ரிஷாப் பாண்ட  அணியில் இடம்பெற்றார் .

விஜய் சங்கர் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளில் சரியாக விளையாடாத காரணத்தினால் அணியிலிருந்து நீக்கப்பட்டு இருப்பார் என்று ரசிகர்கள் நினைத்திருந்தனர் . இதனால் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு அளிப்பதற்காக விஜய் ஷங்கருக்கு ஏற்பட்ட காயத்திற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது  என்று அறிவித்து இருக்கிறார்கள் என்று பலரும் நினைத்தனர் .

ஆனால் இன்று யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் விஜய் சங்கர் காயம் காரணமாக உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன. இதனிடையே நேற்று போட்டியின் முடிவில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் விஜய் சங்கர் தான் 4-வது வீரராக களம் இறங்குவார். அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால் ரிஷாப்  பாண்ட் அணியில்  சேர்க்கப்பட்டிருக்கிறார். 

காயம் குணமானவுடன் விஜய் ஷங்கர்  மீண்டும் அணியில் இடம் பெறுவார் என்று கூறியிருந்தார் . ஆனால் இன்று திடீரென  விஜய் சங்கர் காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார் என்று செய்திகள் வெளிவந்தன . இந்த செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே விஜய் சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற செய்தியும் வெளியானது .

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது விஜய் ஷங்கர் திட்டமிடப்பட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது போல தெரிகிறது . சில காலங்களாகவே கோஹ்லி  மற்றும் ரவி சாஸ்திரி வித்தியாசமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். ஆகையால்  இந்திய அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . அவருக்கு பதிலாக முகமது சமி அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். காயம் குணம் அடைந்தவுடன் மீண்டும்   புவனேஷ்வர்  குமார் அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஆனால் விஜய் சங்கருக்கு மட்டும் காயம் ஏற்பட்ட அடுத்த நாளே ஓய்வு எதுவும் அளிக்கப்படாமல் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டு மாற்று வீரராக மாயங் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.