2 வயது குழந்தைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்! நெஞ்சை உலுக்கி எடுக்கும் காரணம்! கும்பகோணம் விபரீதம்!

2 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவமானது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


கும்பகோணத்தில் காசிராமன் தெரு என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு பிறந்து வளர்ந்தவர் வேத வினோத். இவர் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு பிரபல வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இவருக்கு 2 வயதான மகள் கிருத்தண்யா என்ற மகளுள்ளார். குழந்தைக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்து வந்துள்ளது. இதனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை பார்க்கப்பட்டது. 

சிறிதுகூட காய்ச்சல் குறையாத காரணத்தினால் குழந்தையை தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்றிரவு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த சம்பவமானது கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான குழந்தைகள் இறந்து போவது வாடிக்கையாக அமைந்துள்ளதாக டெல்டா மாவட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அரசாங்கத்தினர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.