பிரமாண்ட கண்டெய்னர் லாரிக்குள் 39 சடலங்கள்..! திறந்து பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்! 25 வயது டிரைவர் வெறிச் செயல்?

லண்டனில் கண்டெய்னர் லாரியில் 39 சடலங்களை ஏற்றி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


லண்டனில் , கிரேய்ஸ் பகுதியில் உள்ள வாட்டர்கிளேட் இன்டஸ்ட்ரீயல் பூங்காவில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டு இருந்திருக்கிறது . அந்த லாரியில் ஏதோ ஒரு கடத்தல் பொருள் உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து விரைந்த போலீசார் அந்த லாரியை பிடித்தனர். லாரி ஆய்வு செய்த போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதாவது இறந்துபோன 39 பேரின் சடலங்கள் அந்த கன்டெய்னர் லாரியில் வைக்கப்பட்டு இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

சடலங்களை கைப்பற்றிய போலீசார் லாரியை பற்றிய விசாரிக்க தொடங்கினர். அந்த லாரி பல்கேரியா நாட்டிலிருந்து வந்ததாக தெரிய பட்டது. மேலும் கடந்த 19ஆம் தேதி தான் பிரிட்டனுக்குள் நுழைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் இந்த லாரி ஓட்டுனர் யாரென்றும் லாரியில் இருந்து 39 சடலங்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்றும் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து அயர்லாந்தை சேர்ந்த 25 வயது மிக்க லாரியின் உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கன்டெய்னர் லாரியில் இத்தனை 39 சடலங்களை கொண்டு வரப்பட்ட செய்தியை அறிந்த உள்துறை அமைச்சர் , பிரதமர் உள்ளிட்டோர் போலீசாரை தீவிரமாக விசாரணை மேற்கொள்ள கோரி உத்தரவிட்டுள்ளனர்.