அம்மாவை அழைத்துக் கொண்டு...! கண்டெய்னர் மீது அசுர வேகத்தில் பாய்ந்த மகனின் கார்! நினைத்துப் பார்க்க முடியாத கோரம்!

காரும், கண்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திரா மாநிலத்தில் கடப்பா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. கடப்பா மாவட்டத்திற்கு உட்பட்ட நிலுப்பள்ளி என்னும் கிராமத்தில் சாய்கிரண் என்பவர் வசித்து வந்தார். துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த  தம்முடைய தாயான முனியம்மாவை அழைத்துக்கொண்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

ஆந்திர மாநிலம் புறநகரான ஒபுலவாரிபள்ளி என்ற இடத்தில் சென்றுகொண்டு இருக்கும்போது கன்டெய்னர் லாரி மீது வேகமாக மோதியுள்ளது. அந்த லாரியானது மகாராஷ்டிராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் சாய் கிரண், அவருடைய தாயான முனியம்மா மற்றும் ஓட்டுநர் பவன்கல்யாண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 3 பேரின் உடல்களை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.