அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு..! 6ம் தேதி ஆலோசனைக் கூட்டம்.

வரும் 7ம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தார். இதனையடுத்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தனித்தனியே ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.


அதனால் 7ம் தேதி அறிவிப்பு இருக்குமா இருக்காதா என்ற குழப்பம் தென்பட்டது. அதற்கு விடை அளிப்பது போன்று 6ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம், அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் வரும் 6ந்தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்தபிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.