கட்சிக்கு ஒரு தொகுதி! காசுக்கு ஒரு தொகுதி! ஸ்டாலினிடமே கல்லா கட்டிய திருமா!

ஒருவழியாக இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்கள் யார் என அறிவித்தார். வழக்கமான அதே ரெண்டு தொகுதிகள், வழக்கமான அதே ரெண்டு வேட்பாளர்கள் என்றாலும் ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.


அதுதான் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது. இரண்டு பேரையுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க. கேட்டுக்கொண்டது. ஆனால் திருமா தனிச்சின்னத்தில் போட்டியிடும்போது, பல்வேறு சிக்கல்கள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்போது, அவர் தி.மு.க.வின் உறுப்பினர் என்று அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும், தி.மு.க.வின் கட்சித் தலைவர் அங்கீகாரம் வழங்கவேண்டும். அதனால் ஒரு வகையில் அவர் தி.மு.க. உறுப்பினராகவே கருதப்படுவார். 

திருமாவளவன் போட்டியிட்டால், அவரால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்று சொல்வது சட்டப்படி தவறாகிவிடும். யாரேனும் கேஸ் போட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். இந்த சிக்கலுக்குப் பயந்துதான் திருமா தனி சின்னத்தில் நிற்கிறார்.

அதே நேரம் தி.மு.க.வில் இருந்து தேர்தல் செலவுக்குப் பணம் கிடைக்காது என்பதால், அதையும் விடக்கூடாது என்பதால் ரவிக்குமாரை உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தியிருக்கிறார்கள். ஆக, பணத்துக்குப் பணமும் வந்தாச்சு, தனிச்சின்னமும் கிடைச்சாச்சு. சூப்பர் திருமா என்று அவரது கட்சிக்காரர்கள் தட்டிக் கொடுக்கிறார்கள்