இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 5 சதவீதத்திற்கும் கீழே குறையும்! ப.சிதம்பரம் பகீர் தகவல்!

இந்திய நாட்டின் பொருளாதாரம் மிகவும் மந்தமான நிலையில் இருப்பதால் பொருளாதார வளர்ச்சி 4.8 சதவீதத்துக்கும் கீழே செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவ்வாறு சென்றால் ஆச்சரியம் ஏதும் இல்லை எனவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருக்கிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியா மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார தேக்க நிலையை சரி செய்ய மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறிய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் பொருளாதார வீழ்ச்சி குறித்து மேற்கொள்கள் எடுத்துக்காட்டி தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். 2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5%-க்கும் குறைவாக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்து உள்ளதாக ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் நம் நாட்டுடைய பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை எனவும் அதிரடியாக கூறியிருப்பது மிகவும் சர்ச்சையை கிளப்பியுள்ளது .

ஆகையால்  பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடப்போகும் பட்ஜெட்டில் இதனை குறிக்கும் திட்டங்கள் இருந்தால் அது நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார். சர்வதேச நிதியத்தின் கணிப்புகளை மேற்கோள் இட்டு கூறியிருக்கிறார். சமூக வலைத்தளத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டு உள்ள இந்த பதிவானது வைரலாக பரவி வருகிறது.