திமுக எங்களுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்காதது வருத்தம்தான்! தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி பகீர் கருத்து!

மாநிலங்கவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தங்களுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி இருக்கலாம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்.


சமீபத்தில் திமுக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்திருந்தது. இந்த வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிக்கு எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மாநிலங்களவை தேர்தலுக்கான உறுப்பினர்களை திமுக எங்களிடம் கூறிவிட்டு தான் அறிவித்தார்கள். 

கூட்டணிக் கட்சியான எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கி இருந்தால் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்போம். காங்கிரசுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்காதது எங்களுக்கு வருத்தமளிக்கிறது எனவும் அவர் கூறியிருந்தார். மேலும் இது வருத்தம் தானே தவிர கோபம் ஏதுமில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருந்தார்.

மேலும் இது குறித்து பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தற்போது அரசியல் சூழலில் திமுக கொடுக்கும் நிலையிலும் காங்கிரஸ் வாங்கும் நிலையிலும் உள்ளது எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.