நான் தான் பேசிகிட்டு இருக்கேன்ல..! காங்கிரஸ் தொண்டரை ஓங்கி அறைந்த கே.எஸ்.அழகிரி! பரபர காரணம்!

சென்னையில் காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி அக்கட்சியின் நிர்வாகி ஒருவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


டெல்லியில் உள்ள ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஜே என் யூ பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதே பகுதியில் வேறு சில மாணவ அமைப்பினரும் போராட்டம் நடத்தி வந்ததால் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் காங்கிரசின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி மாணவர்களிடம் இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகி நரேஷ் என்பவர் மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். 

தான் பேசிக் கொண்டிருக்கும்போது மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகி நரேஷ் என்பவரை காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.