டேய் காங்கிரஸ் என்னடா பண்ற? மகனுக்கு காங்கிரஸ் என பெயர் வைத்த தந்தை..! அதிர வைத்த காரணம்!

காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு காங்கிரஸ் என்ற பெயர் சூட்டி இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு வினோத் ஜெயின் என்பவர் ஊடகப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் காங்கிரஸ் கட்சியின் அதிதீவிர தொண்டர்களில் ஒருவராவார். இதனிடையே ஜூலை மாதத்தில் இவருக்கு 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தைக்கு இவர் காங்கிரஸ் என்று பெயர் சூட்டியுள்ளார்.

இந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழை மாநில அரசாங்கம் இன்று அளித்துள்ளது. அதில் அந்த குழந்தையின் பெயர் காங்கிரஸ் ஜெயின் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழின் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வினோத் ஜெயின் கூறுகையில், "என்னுடைய குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியமான குடும்பமாகும். என்னுடைய குழந்தைக்கு 18 வயது நிரம்பிய பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைதிடுவேன். 

குழந்தைக்கு முதலில் காங்கிரஸ் என்று பெயர் வைப்பதற்கு என்னுடைய குடும்பத்தினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருப்பினும் ஒருவழியாக அவர்களை சமாளித்து காங்கிரஸ் என்று பெயர் வைத்துள்ளேன்" என்று பெருமிதமாக கூறினார். இந்த குழந்தை இவருடைய 2-வது குழந்தையாகும். 18 ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியானது கேட்போர் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.