காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை! பதவியையும் பறித்து சபாநாயகர் உத்தரவு!

கனிம வள திருட்டில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ.,வுக்கு 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


குஜராத் மாநிலத்தில், தலாலா சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினராக பகவான் பாரத் என்பவர் உள்ளார். இவர் கடந்த 1995ம் ஆண்டு மேய்ச்சல் நிலத்தில் இருந்து ரூ.2.5 கோடி மதிப்புடைய கனிம வளத்தை திருடியதாகப் புகார் எழுந்தது.

இதன்பேரில், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சுத்ரபடா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதன் முடிவாக, தற்போது அவரது எம்எல்ஏ பதவியை தகுதியிழப்பு செய்து, 33 மாதங்கள் சிறை தண்டனை விதிப்பதாக, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல் குஜராத் மாநில சட்டமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரும் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் குறைந்த பெரும்பான்மையில் பா.ஜ.க ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில் எம்.எல்.ஏ ஒருவர் பதவி பறிக்கப்பட்டு அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் பட்சத்தில் வெற்றி பெற பா.ஜ.க தீவிரம் காட்டும். இதனால் அந்த தொகுதியும் முக்கியத்துவம் பெறுகிறது.