மாநில அரசுகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை அமல்படுத்த முடியாது என கூற இயலாது! காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி கருத்து!

குடியுரிமை சட்டத் திருத்தத்தை மாநில அரசுகள் அமல்படுத்த முடியாது என்று கூற இயலாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டிருந்தது. குடியுரிமை சட்ட திட்டத்திற்கு எதிராக மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் மற்றும் அந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம். ஆனால் எந்த மாநில அரசும் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடியாது என்று கூற இயலாது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் போராட்டங்களும் எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அவர்களே குடியுரிமை சட்டத்திருத்தத்தை மாநில அரசு அமல்படுத்த இயலாது எனக் கூற முடியாது என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த போவதில்லை என்று மாநில அரசுகள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.