கால் டாக்சியில் கட்டாயம் காண்டம் இருக்க வேண்டும்! அரசின் உத்தரவால் அதிர்ந்த டிரைவர்கள்! ஏன் தெரியுமா?

கால் டாக்ஸிகளின் முதலுதவி பெட்டியில் ஆணுறையில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் அநியாயமானது டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து புதிய மோட்டார் வாகன உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் கால் டாக்ஸிகளில் உள்ள முதலுதவி பெட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த முதலுதவி பெட்டியில் ஆணுறையில்லை என்றால் ஓட்டுநருக்கு கடுமையான அபதாரத்தை விதிக்கின்றனர்.

வேன் ஓட்டுநர்கள் கூறுகையில், "கால் டாக்ஸிகளில் ஆய்வு நடத்தும் போக்குவரத்து காவல்துறையினர் முதலுதவிப் பெட்டியில் ஆணுரைகள் இல்லையென்றால் அபராதம் விதிக்கின்றனர். ஆனால் ஏன் என்ற காரணம் தெரியவில்லை" என்று கூறினர்.

வேறு சில ஓட்டுநர்கள் கூறுகையில், "கால் டாக்ஸிகளிலிருந்து டீசல் ஒழுகும்போது ஆணுறைகளை வைத்து எளிதாக அடைக்க இயலும். வாகனங்களில் செல்லும்போது விபத்துகள் ஏற்பட்டால் ரத்தம் செலவாகாமல் இருப்பதற்கு ஆணுறைகளை உபயோகப்படுத்தலாம்" என்று ஓட்டுநர்கள் கூறினர்.

டெல்லி காவல்துறை ஆணையரான தாஜ் ஹாசன் கூறுகையில், "டெல்லி வாகன திருத்த மசோதாவில் ஆணுறைகள் இருக்க வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. அதற்காக நாங்கள் எந்தவித அபராதத்தையும் இதுவரை வாங்கியதில்லை" என்று  கூறியுள்ளார். 

இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.