ஆ.ராசாவை புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்... காவல் ஆணையரிடம் புகார் மனு

தேர்தல் முடிவதற்குள்ளாகவே, தி.மு.க. அதனுடைய உண்மையான முகத்தை மக்களிடம் காட்டத் தொடங்கிவிட்டது. ஆம், தமிழக முதல்வரை இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார் ஆ.ராசா.


இப்படி அவர், தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதை கண்டித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி அருந்ததியினர் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரிடமும், மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 55 அருந்ததியினர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடமும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுவை அளித்தனர்.இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “திமுக எம்.பி ஆ.ராசா தமிழக முதலமைச்சர் குறித்து அருவறுக்கத்தக்க வகையில் அவதூறு பேசி வருகிறார். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் முதலமைச்சராக உள்ளவரை தொடர்ந்து அவதூறாக பேசும் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும்.” என்றனர்.

ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம், தமிழக தலித் முன்னேற்ற கழக தலைவர் நாகராஜ், அருந்ததியர் விடுதலை முன்னணி தலைவர் என்டிஆர்,தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்க தலைவர் மருதாச்சலம், தமிழ்நாடு அருந்ததியர் சமுதாய மகாசபை மாநில தலைவர் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ராசாவை புடுச்சி உள்ளே போடுங்க சார்.