தாய்மார்கள் புகட்டும் தாய்ப்பாலில் கெமிக்கல்! அதிர வைக்கும் ரிப்போர்ட்!

பிரிட்டன் பெண்களின் தாய்ப்பாலில் ரசாயனப் பொருட்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்


லண்டன்: பிரிட்டன் பெண்களின் தாய்ப்பாலில் ரசாயனப் பொருட்கள் நிறைந்துள்ளதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி The Commons Environmental Audit Committee நடத்திய ஆய்வில், தனிப்பட்ட அலங்காரப் பொருட்கள், படுக்கை விரிப்புகள், தீப்பற்றுவதை தடுக்கும் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்திலும் ரசாயனப் பயன்பாடு அதிகரித்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனால், பிரிட்டனில் வசிக்கும் பெண்களிடையே, கடந்த 1988ம் ஆண்டு முதலாக, உடலில் ரசாயனத்தன்மை அதிகரிக்க தொடங்கியுள்ளதாம். அவர்களில் பலருக்கு, தாய்ப்பாலில் கூட ரசாயனங்கள் அதிகளவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 

இப்படிப்பட்ட ரசாயனப் பொருட்கள் கலந்த தாய்ப்பால் வளரும் சந்ததியினருக்கு ஆபத்தானதாகவே மாறும் எனவும் அந்த கமிட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த விவாகரம் பிரிட்டன் நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது, மேற்கண்ட கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.