சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வரும் மதுரை முத்துவின் தந்தை உடல்நலக்குறைவால் உயிர் இழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் மனைவி மரணம்! பிறகு தாய் உயிரிழப்பு..! மதுரை முத்து வீட்டில் மீண்டும் நிகழ்ந்த சோகம்! கதறி அழும் உறவுகள்!
சிரிக்க வைப்பது என்பது ஒரு மாபெரும் கலை. அந்த கலையை மிகச் சிறப்பாக கொண்டவர்தான் மதுரை முத்து. இவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வாயிலாக போட்டியாளராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து கலக்கப்போவது யாரு என்ற மற்றுமொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் பல லட்சக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். வெள்ளித்திரையில் வெற்றி நடை போடும் காமெடி நடிகர்களைப் போலவே சின்னத்திரையில் வெற்றிக்கொடி நாட்டினார் மதுரை முத்து.
தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்படுபவராக மதுரை முத்து வலம் வருகிறார். வெளிநாட்டில் வாழும் தமிழர்களிலும் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. இதனை தொடர்ந்து சண்டே கலாட்டா என்ற தனி நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார் மதுரை முத்து. தன்னுடைய அசாதாரணமான பேச்சாலும் தனித்துவமான நடிப்பாலும் பலரது உள்ளங்களை கவர்ந்து முகங்களில் சிரிப்பை மலர வைத்த இவரது வாழ்க்கையில் தொடர்ந்து பல சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை முத்துவின் முதல் மனைவி கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக இரண்டாவதாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் மதுரை முத்துவின் தாயார் கடந்த ஆண்டு உயிரிழந்தார். தன்னுடைய தாயார் இறந்த ஒரே ஆண்டில் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்திருந்த மதுரை முத்துவின் தந்தையும் நேற்று முன்தினம் காலமானார். மதுரை முத்துவின் வீட்டில் தொடர்ந்து எழும் இந்த மீள முடியாத இழப்புகள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா பிரச்சினையால் பலரும் நேரில் சென்று அவருக்கு ஆறுதல் கூற முடியாத நிலையில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.