அரசியலுக்கு வருகிறாரா ராணுவ தளபதி? அதிரடி கிளப்புகிறாரே!

பாகிஸ்தானில் ராணுவம்தான் ஆட்சியையே நடத்தும். ஆனால், நம் இந்தியாவில் அப்படியொரு நிலைமை கிடையாது.


ராணுவ அதிகாரிகள் வாயைக்கூட திறக்க முடியாது. ஆனால், இப்போது குடியுரிமை சட்ட விவகாரத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் விவகாரமாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பொது சொத்துக்கள் சேதம் அடைகிறது. 

இந்த போராட்டத்துக்குக் காரணம், மக்களை தவறாக வழிநடத்தும் அரசியல் தலைவர்கள்தான் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார் பிபின் ராவத். மக்களை தவறான பாதையில் வழிநடத்துபவர்கள் சரியான தலைவர்கள் அல்ல. ஏனெனில், போராட்ட களத்தில் ஏராளமான மாணவர்களை நம்மால் காண முடிகிறது என்று டெல்லியில் பேசினார்.

மேலும், பொது சொத்துகளுக்கு தீ வைப்பது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற தவறான பாதையில் வழிநடத்தப்படுகிறார்கள். பொது சொத்துக்களை சேதப்படுத்தவும், வன்முறையில் ஈடுபடவும் பெரிய மக்கள் கூட்டத்தை தூண்டுவது தலைமைக்கு பொருந்தாது, என்றும் கூறியுள்ளார். 

ஆட்சிக்கு ஆதரவாக பேசியதால் பாராட்டு கிடைக்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் பேச விடலாமா என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.