சசிகலாவா... அப்படின்னா யாருங்க... கெத்து காட்டும் கமாண்டர் எடப்பாடி பழனிசாமி.

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த நிமிடமே அத்தனை அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அவர் பக்கம் சேர்ந்துவிடுவார்கள். கட்சியும் அவர் காலடியில் விழுந்துவிடும் என்று தினகரன் கட்சியினர் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தனர்.


ஆனால், அதுவெல்லாம் உண்மை அல்ல. ஜெயலலிதா இருந்தது போன்று அ.தி.மு.க. இன்னமும் ராணுவக் கட்டுப்பாடு கொண்ட கட்சியாக இருக்கிறது என்று பலரும் சொல்லும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. 

இதற்கு காரணம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். ஆம், ஜெயலலிதா பாணியில் ஆட்சி புரிந்துவரும் எடப்பாடி பழனிசாமி, இப்போது அ.தி.மு.க.வை அதே ராணுவக் கட்டுப்பாட்டுடன் நடத்தி வருகிறார்..

சசிகலா சிறை மீண்டதும் அமைச்சர்களே அடிமையாகி விடுவார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இதுவரை ஒரு கவுன்சிலர் கூட இதுவரை அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஆட்களை அழைத்துவர சசி தரப்பில் ரொம்பவே மெனக்கெட்டார்கள்.

இப்படி இரும்புக் கோட்டையாக அதிமுக இப்படி திகழ்வதற்கு முதல்வர் எடப்பாடிதான் முக்கியக் காரணம். சாம தான பேத தண்ட என அத்தனை முறைகளையும் சைலண்டாக பயன்படுத்தி இதை சாதித்துவிட்டார். இதனால் அவரை கமாண்டர் எடப்பாடி என அழைத்தாலும் தப்பில்லை’’ என்கிறார்கள் விஷயமறிந்த கட்சி நிர்வாகிகள்.

கமாண்டர் எடப்பாடி என்று சொல்வதும் நல்லாத்தான் இருக்குது.