காமெடி நடிகர் யோகி பாபு சினிமாவில் வாய்ப்பு தேடும் போது அவர் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியுள்ளார்
வறுமையில் உதவிய நண்பர்கள்! நன்றி மறக்காமல் வாய்ப்பு கொடுக்கும் யோகி பாபு! நெகிழ வைக்கும் சம்பவம்!

காமெடி நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்துள்ளார். இவர் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் தற்போது ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். யோகி பாபு சினிமாவில் வாய்ப்பு தேடும் போது அவர் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியுள்ளார்
நான் ஹீரோவாக நடித்து வரும் "தர்ம பிரபு" பட இயக்குனர் முத்துகுமரனும் நானும் 10 வருடத்திற்கு மேல் நண்பர்களாக பழகி வருகிறோம்.இந்நிலையில் நானும் எனது நண்பன் முத்துகுமரனும் சினிமாவில் வாய்ப்பு தேடி கொண்டிருக்கும் போது லொள்ளு சபாவில் நடித்து அதில் சம்பாதித்த பணத்தில் தான் நாங்கள் இருவரும் பல நாட்கள் சாப்பிட்டு இருக்கிறோம்.
அதிலும் பல நாட்கள் பட்டினியாய் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் தூங்கி இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த காலங்களில் உருவான கதை தான் தர்ம பிரபு பட கதை. சில மாதங்களுக்கு முன்னர் இப்பட கதையை கூறி இயக்குனர் முத்துக்குமரன் நீங்கள் இந்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுப்பீர்களா என்று கேட்டார்.
உடனே நான் என் நண்பன் கேட்டதால் மறுக்காமல் ஒப்பு கொண்டேன் எனவும் யோகி பாபு கூறி இருக்கிறார். மேலும் கூர்கா படத்தின் இயக்குனர் சாம் ஆண்டணும் எனது நீண்ட கால நண்பரே. இந்த இரண்டு நண்பர்களின் படங்களிலும் நான் தற்போது நடித்து வருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.