நடிகை மீனா வீட்டுக்கு சென்றேனா? காமெடி நடிகர் சூரி கொடுத்த திடீர் விளக்கம்!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக வலம் வரும் நடிகர் சூரி, நடிகை மீனாவின் பங்களாவை வாங்கியதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று கூறியிருக்கிறார்.


தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூரி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா போட்டியில் பங்கேற்கும் காட்சி மூலம் பரோட்டா சூரி என்று அவரது ரசிகர்கள் மத்தியில் அன்பாக அழைக்கப்படுபவர் ஆவார்.

நடிகர் சூரி சமீபத்தில் தான் தன்னுடைய சொந்த ஊரான மதுரையில் சைவம் மற்றும் அசைவ உணவகத்தை துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டல் திறப்பு விழாவிற்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சூரி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை மீனாவின் பங்களாவை வாங்கியதாக பல தகவல்கள் வெளியாகின. மேலும் அந்த பங்களாவிற்கு சூரி குடியேறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் நடிகை மீனாவின் பங்களாவை வாங்கயதை பற்றி நடிகர் சூரி இடம் கேட்ட போது , இவை அனைத்தும் வதந்தி தான் என்றும் தான் இப்போதைக்கு சென்னையில் எதையுமே வாங்கவில்லை என்றும் நடிகர் சூரி கூறியுள்ளார்.