சூட்டிங்கின் போது பழக்கம்! இயக்குனரின் தங்கையை தாரமாக்கிய காமெடி நடிகர் சதீஷ்! வைரல் புகைப்படத்தின் பின்னணி!

காமெடி நடிகர் சதீஷ் இயக்குனர் சாசியின் சகோதரியை திருமணம் செய்துகொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


நடிகர் சதீஷ் தமிழ் திரை உலகில் காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் கடந்த 2010ஆம் ஆண்டு தமிழ் படம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் . பின்பு இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் இடையில் புகழ் பெற்றார். இதுமட்டுமில்லாமல் தாண்டவம், வத்திகுச்சி, மான்கராத்தே, சிகரம்தொடு, கத்தி போன்ற திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். 

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த பைரவா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்தனர். இந்த திரைப்படத்தில் காமெடி நடிகனாக சதீஷ் வலம் வருவார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் சதீஷும் கீர்த்தி சுரேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது .

இந்நிலையில் நடிகர் சதீஷ் நடிகை கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாக கூறப்பட்டது . கீர்த்தியும் இவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது . ஆனால் அவை அனைத்தும் பொய் என சிறிது காலம் கழித்து தெரியவந்தது.

தற்போது மீண்டும் சதீஷ் வேற ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் சதீஷ், வைபவுடன் இணைந்து சிக்ஸர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் . சிக்ஸர் திரைப்படத்தை அறிமுக இயக்குனரான சாசி இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்தபோது சாசியின் சகோதரியுடன் சதீஷ்க்கு காதல் ஏற்பட்டுள்ளது . அதனை அவர்கள் வீட்டாரிடம் கூறி திருமணத்துக்கு சம்மதமும் பெற்றுள்ளார் . தற்போது இவர்கள் இருவரின் திருமண நிச்சயதார்த்தம் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.