படப்பிடிப்பில் மாரடைப்பு! பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்! திரையுலகினர் அதிர்ச்சி!

நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்.


தமிழ் சினிமாவில் புரடக்சன் மேனேஜராக வாழ்வை தொடங்கியர் கிருஷ்ணமூர்தி. பிறகு நடிக்க ஆரம்பித்த இவர் வடிவேலுடன் இணைந்து செய்த காமெடிகள் பேசப்பட்டன. அதிலும் தவசி படத்தில் பின்லேடன் அட்ரஸ் கேட்டு வடிவேலுவை அதிர வைக்கும் கேரக்டர் மூலம் பட்டி தொட்டி எங்கும் இவர் பிரபலமானார்.

தொடர்ந்து பாலாவின் நான் கடவுள் படத்தில் குணசித்ர வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். குமுளியில் படப்பிடிப்பில் இருந்த இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.   இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்துள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்த தகவல் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அனைவருடனும் நட்பு பாராட்டக்கூடிய கிருஷ்ணமூர்த்தி மறைவை தொடர்ந்து பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.