சுடச்சுட கஞ்சா..! சூடான கஞ்சா..! பலான தொழிலில் பூண்டி புஷ்பம் கல்லூரி மாணவி! தஞ்சை பரபரப்பு!

மாணவர்களும் மாணவிகளும் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த சம்பவமானது தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு உதவி பெறும் கல்லூரியில் சமீப காலங்களில் பல சமூகத்திற்கு எதிரான செயல்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. அதன்படி அந்த கல்லூரியில் பயிலும் மாணவி மற்றும் 4 மாணவர்கள் கல்லூரி வளாகங்களில் கஞ்சா விற்றதாக அப்போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக காவல்துறையினர் அந்த மாணவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றதாக பல புகைப்படங்கள் வெளியாகின. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கோவிலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள். 

காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் உண்மையை ஒப்பு கொண்டதாகவும், அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களை மன்னித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தியபோது, "பிடிப்பட்ட மாணவர்கள் எங்கள் கல்லூரியை சேர்ந்தவர்கள் இல்லை. காவல்துறையினரும் எங்கள் கல்லூரி மாணவர்கள் பிடிபட்டதாக எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளனர்.

மேலும் காவல்துறையினரிடம் விசாரணை நடத்தியதில், "பிக்பாக்கெட் சம்பவத்திற்காக பல மாணவர்களிடம் விசாரணை நடத்தினோம். ஆனால் அவர்கள் கஞ்சா கடத்தியதாக எங்களுக்கு எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. நாங்கள் விசாரிக்க சென்ற மாணவர்கள் அவர்களா என்பது இன்னும் தெரியவில்லை. 

இந்த செய்தியானது கல்லூரி வட்டாரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.