கோயம்புத்தூரில் உள்ள ஓயோ ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த இளம்பெண்களை போலீசார் கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர் படுத்தி உள்ளனர்.
ஊரடங்கு நாளிலும் கை நிறைய காசு! பார்ட் டைம் விபச்சாரத்தில் ஈடுபடும் கோவை கல்லூரி மாணவிகள்! ஓயோ ஹோட்டலில் கஸ்டமர்கள்!

தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜ்கள் ஆகியவற்றை மூடும்படி அரசு உத்தரவிட்டது. ஆனால் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் இயங்கிவரும் ஓயோ ஹோட்டல்ஸ் அரசாங்க உத்தரவை மீறி செயல்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை வைத்து போலீசார் அந்த சின்ன மேட்டுப்பாளையத்தில் அமைந்திருக்கும் ஹோட்டலில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது ஹோட்டலில் இரண்டு அறைகளில் ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. ஒரு அறையில் பியாஸ் என்ற கல்லூரி மாணவன் தன்னுடைய காதலியுடனும் மேலும் சதாம் உசேன் என்ற மற்றொரு கல்லூரி மாணவன் தன்னுடைய காதலியுடனும் 2 அறைகளில் தனித்தனியாக தங்கி இருந்ததை கண்டறிந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்கள் திருப்பூரில் உள்ள கணபதிபாளையத்தைச் சேர்ந்த 22 வயது பெண் மற்றும் திருப்பூரில் உள்ள கண்டியன் கோவிலைச் சேர்ந்த 25 வயதான சிவகுமார், நீலகோனம்பாளையம், போதானூரைச் சேர்ந்த எச்.பியாஸ், 27, குனியமுத்தூரைச் சேர்ந்த சதாம் உசேன், 29 என தெரியவந்துள்ளது.
இவர்கள் அந்த ஓட்டல் அறையில் பாலியல் மோசடி மற்றும் ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். ஆகையால் அவர்கள் மீது கடத்தல் (தடுப்பு) சட்டத்தின் 3 (2) (அ) மற்றும் 4 (2) (சி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பாலில் மோசடியில் முக்கிய பங்கு வகித்த சென்னையை சேர்ந்த சுதா என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பியாஸ் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் இணைந்து தங்களுடன் படிக்கும் கல்லூரி மாணவ மாணவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில். முதலில் இந்த இளைஞர்கள் பேஸ்புக் மூலம் பெண்களிடம் நட்பாக பழகி பின்னர் அவர்களை விபச்சார தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.