ஒரே ஒரு பேராசிரியர் மீது 126 இளம் பெண் டாக்டர்கள் செக்ஸ் புகார்! தூத்துக்குடி பரபரப்பு!

தூத்துக்குடி அரசு பொது மருத்தவக்  கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் மீது கல்லூரி மாணவிகள் புகார் அளித்துள்ளது கல்லூரி நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அந்தக் கல்லூரியில் எலும்பியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் கந்தசாமி. இவர் மீது எண்ணற்ற அளவில் பாலியல் குற்றங்கள் எழுந்துள்ளன. அதாவது அரசு ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்த மாணவிகளிடம் தவறான முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியில் அவர்களை துன்புறுத்துவதாகவும் குற்றங்கள் குவிந்துள்ளன.

கல்லூரி படிக்கட்டுகளில் மாணவிகள் நடந்து செல்லும் போது அவர்களை நெருங்க முயற்சிக்கிறார். மேலும் தன்னுடைய ஆசைகளுக்கு இணங்க மறுத்தால், அவர்கள் படிப்பை முடித்த சான்றிதழை மயங்க மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் அப்புகாரில் எழுதப்பட்டுள்ளது. தனக்கு வேண்டிய பகுதி மருத்துவர்களை மருத்துவமனையிலேயே வைத்துக் கொண்டு அவர்களுடன் சில்மிஷம் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளனர்.

செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், ஆபாச படங்களை செல்போன்களில் ஷேர் செய்வதாகவும் சுமார் 126 மாணவிகள் குமுறுகின்றனர். இரவு நேரங்களில் அவருடன் செல்ல நிர்ப்பந்திப்பதாகவும், இல்லையெனில் பழி வாங்குவதாகவும் கூறுகின்றனர்.

இறுதியாக மாணவிகள், தங்கள் பெயரை குறிப்பிடாததருக்கு காரணம் தெரிவித்துள்ளனர். அதாவது, பெயரைக் குறிப்பிட்டால் தங்கள் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதாலும், அவரை கல்லூரியில் இருந்து உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவ டீன் அவர்கள், புகாரில் பெயரில்லாமல் வந்துள்ளதால் மொட்டை புகார் என்று தட்டிக் கழிப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்.