தண்டவாளத்தில் அமர்ந்து மது விருந்து! போதையில் மயங்கிய 5 மாணவர்கள்! அசுர வேகத்தில் ஏறி இறங்கிய ரயில்! உடல்கள் சிதைந்த பயங்கரம்!

கோவை மாவட்டத்தில் சூலூர் பகுதிக்கு அருகில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மீது ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் எனும் பகுதியில் வசித்து வருபவர்கள் கல்லூரி மாணவர்கள் கருப்பசாமி மற்றும் கௌதம் ஆகியோர் ஆவர். கல்லூரியில் படித்து வருபவர்களுக்கு ஒரு சில பாடங்களில் ஹரியஸ் இருந்திருக்கிறது. இதனையடுத்து மறு தேர்வு எழுதுவதற்காக இவர்கள் இருவரும் இணைந்து சூலூர் சென்றிருக்கின்றனர்.

பரீட்சை எழுதுவதற்காக சென்ற கருப்பசாமி மற்றும் கௌதம் இருகூர் என்ற இடத்தில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். இவர்களுடன் அந்த கல்லூரியில் படித்து வரும் விஸ்வநேசன், சித்திக் ராஜா, ராஜசேகர் ஆகியோர் இணைந்து அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்று இருக்கின்றனர். 

ரயில் நிலையத்தின் அருகில் இருந்த தண்டவாளத்தில் அமர்ந்து ஐந்து பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து சென்னையை நோக்கி வந்த அதிவேகரயில் தண்டவாளத்தின் மீது அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த இவர்கள் 5 பேர் மீது மோதியது. 

ரயில் மோதியதில் கருப்புசாமி ,கௌதம், சித்திக் ராஜா ,ராஜசேகர் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் .இதில் விஸ்வநேசன் மட்டும் அதிர்ஷ்டவசமாக படுகாயங்களுடன் உயிர் தப்பினார் .இந்த விபத்தை அடுத்து அந்த ரயிலை ஓட்டி வந்த ஓட்டுனர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் விஸ்வநேசன் போலீசாரால் காப்பாற்றப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் மற்ற 4 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இதனை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.