காலையில் மாணவி! மாலையில் திருடி! அதிர வைத்த இந்துஸ்தான் காலேஜ் மோகனப்பிரியா!

மின்சார ரயில்களில் திருடி வந்த கல்லூரி மாணவியை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாகவே மின்சார ரயில்களில் பயணிக்கும் பெண் பயணிகளிடம் இருந்து கைப்பைகள்,நகைகள் முதலியன பறிக்கப்பட்டு வந்துள்ளன. இதுகுறித்த புகார்கள் எழும்பூர் மற்றும் மாம்பலம் காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்டிருந்தன. இதனிடையே மாறுவேடத்தில் மாம்பலம் காவல்துறையினர் ரயில் பெட்டிகளில் கண்காணித்து வந்தனர். 

அப்போது சந்தேகத்துக்கு இடமான இளம்பெண்ணை காவல்துறையினர் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்பதும், அவர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் படித்து வரும் மாணவி என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் காவல்துறையினர் அவரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தியதில், தான் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து காவல்துறையினர் 4 கிராம் தங்க நகைகள், சில 500 ரூபாய் நோட்டுகள், மற்றும் சில கைப்பைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மோகனப்பிரியாவை சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவமானது மாம்பலம் காவல் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.