நான் இருக்கும் போது, அவள்ட்ட பேசுறியா? காதலன் தகாத உறவால் இளம் காதலிக்கு நேர்ந்த பயங்கரம்!

கல்லூரி மாணவி ஒருவர் தான் காதலித்து வந்த நபர் ஏமாற்றியதால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் குங்கும பாளையத்தில் வசித்து வருபவர் கல்லூரி மாணவி பிருந்தா (வயது 19). இவர் பல்லடத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் கல்லூரி மாணவி ஆவார். தன் வீட்டின் அருகில் உள்ள சந்தோஷ் என்ற வாலிபரை உயிருக்கு உயிராக காதலித்து வந்திருக்கிறார்.

நாட்கள் செல்ல செல்ல பிருந்தாவும் சந்தோஷும் ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சந்தோஷ் திடீரென்று பிரிந்தாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனை அடுத்து வேறு ஒரு பெண்ணுடன் சந்தோஷ் பழக ஆரம்பித்து விட்டார். இதனைப் பற்றி அறிந்த பிரிந்தா மன விரக்தியில் செய்வதறியாது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். 

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ இட்டிருக்கிறார் பிருந்தா. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற ஓடி வந்துள்ளனர்.ஈொ மிகவும் ஆபத்தான நிலையில் உடலில் எரிந்த தீயை அணைத்து அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிருந்தாவை விசாரணை செய்துள்ளனர். விசாரணையின்போது தனக்கும் சந்தோஷுக்கும் இடையில் ஏற்பட்ட காதலை பற்றியும் அவர் திடீரென்று பேசாமல் தன்னை ஏமாற்றி விட்டதால் நேர்ந்த விரக்தியில் இவ்வாறாக தான் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும் மரண வாக்குமூலம் அளித்தார்.

அதன்பின்பு தீவிர சிகிச்சை பலனின்றி இளம் பெண் பிருந்தா பரிதாபமாக இன்று காலை உயிரிழந்தார் . இந்த சம்பவம் பல்லடம் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மேலும் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.