பெரியார் பல்கலைக்கழகத்தில் சடலமாக தொங்கிய சீனியர் மாணவி! காரணம் பாலியல் தொல்லை? பகீர் புகார்!

பெரியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் நிவேதிதா என்ற மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த மாணவி நிவேதிதா. இவர் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் முதுநிலை இரண்டாமாண்டு படிப்பை பயின்று வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இவரிடம் கல்லூரி பேராசிரியர் ஒருவர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிவேதிதா தவறான முடிவுக்கு சென்றிருக்கிறார்.

நிவேதிதா தன்னுடைய கல்லூரிப் படிப்பை கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார். பேராசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதையும் கருத்தில் கொண்டு கல்லூரி விடுதியில் யாருக்கும் தெரியாமல் நேற்றைய தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் இந்த மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிவேதிதாவின் மரவை அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர். 

பின்னர் கல்லூரி நிர்வாகம் அருகில் இருந்த காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது தகவலறிந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் நிவேதிதாவின் தற்கொலைக்கான காரணங்களை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.