உங்கள் மனைவியின் நிர்வாண புகைப்படம் வேண்டுமா? அப்பாவி பெண்களின் கணவன்களை கதற வைத்த ரோஹித்..! ராம்நாடு பகீர்!

போலியான முகநூல் கணக்குகளை பயன்படுத்தி மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவரது கணவர்களிடம் இருந்து பணம் பறித்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி வருண் குமார், பொதுமக்கள் தங்களுடைய புகார்களை அளிப்பதற்கு தனிப்பட்ட எண் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்ட ஒருவர் தன் மனைவியின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று தன்னை ஒருவர் மிரட்டி பணம் கேட்பதாக கூறியிருக்கிறார். ஒருவேளை பணம் தரவில்லை என்றால் அந்த மார்பிங் செய்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்றும் அந்த மர்ம நபர் தன்னை மிரட்டி வருவதாக போலீசாரிடம் கூறியிருக்கிறார்.

இதற்கு காவல்துறை அதிகாரியான வருண் குமார் இதற்காக சிறப்பாக தனிப்படை ஒன்றை அமைத்திருக்கிறார். அந்த தனிப்படை காவல் துறை அதிகாரிகள் சைபர் கிரைம் உதவியுடன் தீவிர தேடுதலில் இறங்கி இருந்தனர். அப்படியாக விசாரணை செய்த பொழுது பரமக்குடி உலகநாத புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் ரோஹித் ( வயது 19) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வரும் ரோஹித்தை போலீசார் முதலில் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்துள்ளனர். 

விசாரணையின்போது போலீசாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது ரோஹித், முகநூலில் 4 போலியான கணக்குகளை உருவாக்கி இருக்கிறார். அதில் இரண்டு கணக்குகள் மூலம் முகநூலில் இருந்த பல பெண்களின் புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்கள் ஆக மாற்றி அவரது உறவினர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். பணம் தரவில்லை என்றால் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இதுகுறித்து போலீசாருக்கு விசாரணையின் பொழுது தகவல்கள் கிடைத்துள்ளது.

மேலும் ரோகித் வைத்திருந்த செல்போனை வாங்கி போலீசார் சோதனையிட்டனர்.

  அதில் பல பெண்களின் ஆபாச படங்கள் வீடியோக்கள் ஆகியவை அடங்கி இருந்தது. ரோகித் முகநூலை பயன்படுத்தி பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த போலவே உச்சிபுள்ளி புதுமடம் என்ற பகுதியில் வசித்து வரும் சிவகுமார் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் போலியான அக்கௌன்ட்களை உருவாக்கி பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சிவகுமார் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.