கல்லூரி பஸ் - லாரி நேருக்கு நேர் மோதிய கோரம்! 20 பேருக்கு நேர்ந்த பரிதாபம்! தொடரும் தொப்பூர் கணவாய் அமானுஷ்யம்!

தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியது..! மாணவிகள் படுகாயம்..


தர்மபுரி மாவட்டத்தில் தொப்பலுர் என்ற இடம் அமைந்துள்ளது. தனியார் கல்லூரி பேருந்து ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு தொப்பலுர் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. நேருக்கு நேர் மோதிய உடன் பேருந்தில் இந்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்து அலறி துடித்தனர்.

விபத்தில் கல்லூரி பேருந்தில் வந்த மாணவி ஒருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகிலிருந்த தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . மேலும் இரண்டு மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.