இந்த சாதி பொண்ணுக்கெல்லாம் அனுமதி கிடையாது - பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த கொடுமை

கல்லூரி மாணவி ஒருவர் கழிப்பறைக்கு சென்றபோது தாழ்ந்த ஜாதி என்ற காரணத்தை கூறி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவமானது உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நம் நாட்டிலேயே புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பனாரஸ் பல்கலைக்கழகம் ஒன்றாகும். அங்கு படிக்கும் மாணவி ஒருவர் இயற்கை உபாதையை கழிக்க கழிப்பறைக்கு சென்று கொண்டிருந்தார். எதிர்பாராவிதமாக கழிப்பறையின் வாசலில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பின்னர் கழிப்பறைக்கு செல்ல அனுமதி அளிக்கவில்லை.மாணவி தாழ்ந்த சாதிப்பெண் என்பதால், அவரை உள்ளே அனுப்ப இயலாது என்று காவலர் கூறியுள்ளார். இதைக் கேட்டு கல்லூரி மாணவி மிகவும் அதிர்ந்தார். மேலும், கல்லூரி மேல்நிலை நிர்வாகத்திடம் தனக்கு நேர்ந்த இன்னல்களை கூறியுள்ளார். 

காவலர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட நிர்வாகம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும் இது போன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நேராமல் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளனர். இந்த மனித இரக்கமற்ற சம்பவத்தின் மீது உரிய வகையில் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

சாதி அடிப்படையில் கழிப்பறைக்கு செல்ல இயலாத சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.