ஒரே ஒரு பிரியாணிக்கு ரூ.40 ஆயிரம்! ஆன்லைன் ஆர்டரால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

பிரியாணி சாப்பிட ஆசைப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் 40,000 ரூபாய் ஏமாந்த சம்பவமானது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையில் சவுகார்பேட்டை என்னும் பகுதி உள்ளது. இங்கு அகர்வால் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தன் கல்லூரி நண்பர்களுடன் இணைந்து வடபழனி சென்றுள்ளார். அங்கு தன் செல்போனில் உள்ள "ஊபர் ஈட்ஸ்" என்கிற செயலி மூலம் பிரியாணி ஒன்றை ஆர்டர் செய்தார். தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து பிரியாணிக்காண தொகையான 76 ரூபாய் செலுத்தியுள்ளார்.

ஆனால் சில நிமிடங்கள் கழித்து ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாக செயலில் தகவல் வந்துள்ளது. ஆச்சரியமளிக்கும் வகையில் செலுத்திய 76 ரூபாய் அவருக்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் இணையத்தளத்திலிருந்து ஊபர் ஈட்ஸ் சேவை மைய எண்னை கண்டுபிடித்து அழைத்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு தான் தொடர்பு கொள்ளும் எண்னானது மோசடி எண் என்று தெரியவில்லை. மறுமுனையில் பேசிய நபர் பெண்ணின் வங்கிக்கணக்கு பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

பின்னர் 76 ரூபாய் என்பது சிறிய தொகையாக இருப்பதால் திரும்ப அனுப்ப இயலாது என்று கூறியுள்ளார். 5,000 ரூபாய் அனுப்பினால் மொத்தமாக 5,076 ரூபாய் திருப்பி அனுப்பப்படும் என்று பெண்னிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய அவர் "கூகுள்-பே" செயலி மூலம் 5,000 ரூபாயை மறுமுனையில் இருந்த நபர் கூறிய எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதன்மூலம் மாணவியின் மொத்த வங்கி தகவல்களையும் அந்த நபர் பெற்றுவிட்டார். மாணவி தனக்கு இன்னும் பணம் வந்து சேரவில்லை என்று கூறியபோது  "ஓடிபி" எண் வரும் அதை கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதேபோன்று 8 முறை அவர் பெண்ணின் அக்கவுண்டில் இருந்து 5,000 ரூபாய் எடுத்துள்ளார். எடுத்தவுடன் தொடர்பை துண்டித்து நபரை, மீண்டும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

இவ்வளவு நடந்த பிறகே தானே மாற்றப்பட்டிருப்பதை பெண் உணர்ந்தார். பின்னர் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் நபர் உபயோகித்த செல்போன் எண் மூலம், அவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.