காதலன் ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள மாணவியொருவர் முயன்ற சம்பவமானது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிட்டை குடித்த கல்லூரி மாணவி! காதலன் கூப்பிட்ட போதெல்லாம் சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் கள்ளர் தெரு என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தத் தெருவில் சிண்ணப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனின் பெயர் அருண்குமார். இவரின் வயது 21. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்காட்டி எங்கள் பகுதியில் அருண்குமாரின் தாய்மாமன் மளிகை கடை நடத்தி வருகிறார். அருண்குமார் அந்த மளிகை கடையில் பணியாற்றி வருகிறார்.
அருண்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த கல்லூரியில் பயின்று வரும் மாணவியுடன் நெருக்கம் ஏற்பட்டது. நெருக்கமானது பின்னர் காதலாக மாறியது. அருண்குமார் பெண்னை திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்துள்ளார். அருண்குமாரை நம்பி மாணவி பல்வேறு இடங்களில் அவருடன் உல்லாசமாக சுற்றி வந்தார். தனிமையில் இருவரும் உடலுறவும் கொண்டனர்.
பிறகு அருண்குமாரை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மாணவி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அருண்குமார் மறுத்துள்ளார். பலமுறை மருத்துவத்தை பார்த்தபோது, உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். பல நாட்கள் துக்கத்தில் ஆழ்ந்திருந்த மாணவி நேற்று வீடு சுத்தம் செய்வதற்கு வைத்திருந்த பாட்டிலிலிருந்த ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகளிர் அதிர்ஷ்டவசமாக அவளின் உறவினர்கள் கண்டுள்ளனர். மாணவியை மீட்டு அவருடைய உறவினர்கள் அவரை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் நாயகியின் காதல் கதையை அப்போதே காவல்துறையினரிடம் கூறி அருண் குமார் மீது புகார் அளித்துள்ளனர். மாணவிக்கு 17 வயதே நிரம்பியுள்ளதால், போக்ஸோ சட்டத்தின் கீழ் அருண்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.