நடுவீட்டில் தூக்கில் தொங்கிய கல்லூரி மாணவி! நேரில் பார்த்த 10 வயது தங்கை! அதிர வைக்கும் காரணம்!

திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவியொருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவமானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டத்தில் பாடியூர் நாட்டாமை காரன்பட்டி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு கிருஷ்ணகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலதி என்ற 19 வயது மகளும் கிருத்திகா என்ற 10 வயது மகளும் உள்ளனர். மாலதி எரியோட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ பட்டம் பயின்று வருகிறார். 

கிருஷ்ண கோபாலும் அவருடைய மனைவியும் கேரளா மாநிலத்தில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மாலதி மற்றும் கிருத்திகா தங்களுடைய பாட்டி வீட்டில் வசித்து படித்து வருகின்றனர். 

இந்நிலையில் எதிர்பாராவிதமாக, இன்று காலை மாலதி தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் உடலை கண்ட சகோதரி கிருத்திகா அதிர்ந்து தன் பாட்டியை அழைத்துள்ளார்.

மேலும் அப்பகுதி காவல்துறையினரிடம் நிகழ்ந்த சம்பவத்தை கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாலதியின் உடலை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

காவல்துறையினர் மாலதி காதல் விரக்தியால் தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதும் மனக்கசப்பினால் தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.