ஆடம்பரச் செலவு செய்ய முடியாத சோகத்தில் உயிர்விட்ட கல்லூரி மாணவி! கோவை பரபரப்பு!

கல்லூரி மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது பெரியநாயக்கன்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகே உள்ள வீரபாண்டி ஊராட்சியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயன் மந்தால். இவருடைய மகளின் பெயர் அப்போதயா மந்தால். இவர் அந்த கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருடைய வயது 19.

அபோதயாவுக்கு அவருடைய குடும்பத்தினரால் சரியாக  பணம் அனுப்ப இயலவில்லை. தன்னுடன் படிக்கும் பெண்கள் ஆடம்பரமாக செலவு செய்வதை கண்டு அவர் மனவருத்தம் அடைந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாகவே அவர் தன் தோழிகளுடன் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இன்று அவர் வயிற்று வலி என்று கூறி கல்லூரிக்கு செல்லவில்லை. பல மணி நேரம் தனிமையில் வருத்தத்துடன் கிடந்த அவர் திடீரென்று தற்கொலை செய்து கொள்ள நினைத்தார். தன் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடுதி அறையின் தோழியர்கள் கதவை திறந்து பார்த்த போது பேரதிர்ச்சி அடைந்தனர். அபோதயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

அவர்கள் பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அபோதயாவின் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவமானது பெரியநாயக்கன்பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.