தாய் தந்தை இல்லை! தனிமையில் இருந்த ரத்னஸ்ரீ! வீடு புகுந்த மிரட்டிய இளைஞன்! பிறகு நேர்ந்த விபரீதம்! அதிர வைக்கும் சம்பவம்!

வீட்டில் யாருமில்லாத நேரத்தில் மாணவியொருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்த சம்பவமானது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டம் அமைந்துள்ளது. இங்கு ரத்னஸ்ரீ என்ற மாணவி கல்லூரியில் படித்து வந்தார். இவருடைய வயது 18. துரதிஸ்டவசமாக இவருடைய பெற்றோர் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தனர். ரத்னஸ்ரீ தன்னுடைய பாட்டியான வெங்கம்மாளுடன் வசித்து வருகிறார்.

கல்லூரி தொடங்கியதிலிருந்தே ரத்னஸ்ரீக்கு வம்செட்டி என்ற இளைஞர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வம்செட்டி ரத்னஸ்ரீயை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ரத்னஸ்ரீ அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. இதனால் வம்செட்டி மாணவி மீது கடும் ஆத்திரத்திலிருந்தார்.

2 நாட்களுக்கு முன்னர் வெங்கம்மாள் வெளியே சென்றுள்ளார். இதனை அறிந்து கொண்ட வம்செட்டி ரத்னஸ்ரீ தனியாக இருந்த இருந்தபோது வீட்டிற்கு வந்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ரத் ஸ்ரீ மிகவும் அதிர்ச்சியடைந்தார். அவனை காதலித்து திருமணம் செய்து கொள்வதை விட தற்கொலை செய்து கொள்வதே மேல், என்றெண்ணிய ரத்னஸ்ரீ பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வெங்கம்மாள் வீடு திரும்பிய போது தன் பேத்தி தரையில் சுயநினைவின்றி இருந்ததை கண்டு அதிர்ந்துள்ளார். அவரை அருகிலிருந்த அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு ரத்னஸ்ரீயை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இந்த சம்பவமானது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.