மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண்ணை அழைத்துச் சென்று கர்ப்பமாக்கிய இளைஞன்! ஒரே வாரத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தவரை காவல்துறையினர் கைது செய்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது.


கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை என்ற பகுதி அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட படந்தாலுமூடு எனும் இடமுள்ளது. இப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவருடைய உறவினர் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். அவர் நிறைமாத கர்ப்பிணி என்பதால் பிரசவ காலங்களில் உதவிகரமாக இருப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண் கேரளா சென்றிருந்தார்.

அந்த மருத்துவமனையில் கொல்லம் பகுதியை சேர்ந்த அனீஷ் என்பவர் பணியாற்றி கொண்டிருந்தார். இருவரும் சிரித்து பேச தொடங்கினர். நாளடைவில் நெருக்கமானது காதலாக மாறியது. 4-ஆம் தேதியன்று அனீஷ் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனீஷை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அனீஷ் அதனை மறுத்துவிட்டார். மேலும் தனியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ந்த இளம்பெண் தன் குடும்பத்தினரிடம் தகவலை தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் அனீஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தசம்பவமானது படந்தாலுமூடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.