தட்டித் தள்ளிய கல்லூரி பேருந்து! பைக்குடன் தடுமாறி விழுந்த கர்ப்பிணி! கண் இமைக்கும் நொடியில் நிகழ்ந்த விபரீதம்!

இருசக்கர வாகனத்தின் மீது கல்லூரி பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவசமாக கர்ப்பிணி பெண் உயிர்பிழைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் ரேனுகா என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குமரன் காலனியில் வசித்து வருகிறார். நேற்று நிறுவனத்திலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, கல்லூரி பேருந்து அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தது.

எதிர்பாராவிதமாக இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. மோதிய அதிர்ச்சியில் ரேனுகா கீழே விழுந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக எந்தவொரு அசம்பாவிதமுமின்றி ரேனுகா பிழைத்துள்ளார். லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். பொதுமக்கள் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவமறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவமானது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.