புடவையை ஆண்களும் அணியலாம் என தெரிவித்த மாணவர்கள், புடவையை அணிந்தும் கல்லூரி வந்த சம்பவம் புனேவில் நடைபெற்றுள்ளது
கச்சிதமான ஜாக்கெட்..! நேர்த்தியான புடவை..! காலேஜூக்கு பெண்களின் சேலை அணிந்து வந்த மாணவர்கள்..! அதிர்ச்சி காரணம்!
ஆண், பெண் சமம் என்னதான் மேடையேறி பக்கம் பக்கமாக பட்டிமன்றத்தில் பேசினாலும், உடை என வரும்போது ஆண்கள் உடையை பெண்கள் அணியும்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் பெண்கள் உடையை ஆண்கள் அணிந்து வந்தால் அவர்களை கேலியாகவும், திருநங்கைகள் போலவும் சித்தரித்து பேசுகின்றனர்.
இதுபோன்ற கிண்டல்களை ஒழிக்க வேண்டும் என்றால் அனைத்து ஆண்களும் புடவை கட்டிக்கொள்ள பழக வேண்டும் என மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
புனேவில் பெர்குசன் கல்லூரியில் Tie and Saree day கொண்டாடப்பட்டது. இக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் ஆண்கள் கோட்-சூட்டிலும், பெண்கள் புடவையிலும் வருவது வழக்கம்.
ஆனால், ஆகாஷ் பவார், சுமித் ஹொன்வாட்கர் மற்றும் ருஷிகேஷ் சனப் ஆகிய மூன்று மாணவர்கள் மட்டும், புடவை அணிந்து அதற்கேற்ற அலங்காரங்களுடன் கல்லூரி வந்தனர். இதை பார்த்த சக மாணவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெண்கள் மட்டும்தான் புடவை உடுத்த வேண்டும்; ஆண்கள் அணியக் கூடாது என்ற வரைமுறைகள் இல்லை. பெண்களின் உடை அவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டதுபோல் உள்ளது. அவர்களின் உடையை ஆண்கள் அணிவது இழிவான செயலாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்-பெண் பாலின பாகுபாடுகள் மாற வேண்டும் என அந்த 3 மாணவர்களும் தெரிவித்தனர்.
இதெல்லாம் சரிதான். ஏற்கனவே வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு வந்தால் கூட ஜொல்லுவிடும் காமுகர்கள் உள்ள இந்த உலகில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் புடவையில் வரும் ஆண்களை அலாக்காக தூக்கிச் சென்று காமக்கொடூரர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டால் என்ன செய்வது? எதற்கும் புடவை அணிந்து செல்லும் ஆண்களும் இனி தங்களது மொபைலில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.