பிரகதியை கொலை செய்தவன் வேறு யாரும் இல்லை! சொந்த அத்தை மகனாம்! அதிர வைக்கும் காரணம்!

கல்லூரி மாணவி பிரகதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவன் அவரது சொந்த அத்தை மகன் என்பது தெரியவந்துள்ளது.


பிரகதி மாயமானதாக புகார் எழுந்த மறுநிமிடமே போலீசார் சதீசை கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று சதீஷ் கூறியுள்ளான். இந்த நிலையில் தான் பிரகதி உடல் பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் கிடைத்தது. அதற்கு அருகே பிரகதியின் செல்போனும் இருந்தது.

அதனை எடுத்து ஆராய்ந்த போலீசார் பிரகதி கடைசியாக சதீசிடம் பேசியதை உறுதி செய்தனர். இதனை அடுத்து சதீசை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். போலீசார் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்னரே சதீஷ் உண்மையை ஒப்புக் கொண்டான். பிரகதியின் அழகில் மயங்கி அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக சதீஷ் கூறியுள்ளான்.

மேலும் தனது அத்தை மகள் என்பதால் உரிமையாக சென்று பெண் கேட்ட போது அவள் படிக்க வேண்டும் என்று கூறி பெண் தர மறுத்துவிட்டதாக சதீஷ் கூறியுள்ளான். இதனால் தான் வேறு ஒரு பெண்ணை மணந்து குழந்தை பெற்றநிலையில் பிரகதியுடன் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் பிரகதிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆனதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக கூறியுள்ளான் சதீஷ்.

ஆனால் எதற்காக பிரகதியை இந்த அளவிற்கு கொடூரமாக சித்ரவதை செய்து சதீஷ் கொலை செய்தான் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.